மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட ரத்வத்தை தோட்ட பகுதியில் அடாவடியில் ஈடுபட்ட உதவி தோட்ட முகாமையாளர் பணி நீக்கம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் இணங்கியுள்ளது.
அத்துடன், குறித்த உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து கொடுக்கவும் நிர்வாகம் இணங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தோட்ட மக்களிடம் பகிரங்கமாக நிர்வாக தரப்பினர் மன்னிப்பு கோரியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தனது முகநூலில் கூறி இருக்கிறார்.
சொல்லை விட செயலே மேன்மையானது… என தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு முறுகல் நிலை தோன்றியதாகவும் பின்னர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக தெரியவருகிறது.