அஸ்ரப் அலீ
பல்லேகெல சிறைச்சாலையில் கைதியொருவரின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
பல்லேகெல சிறைச்சாலையின் பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விசேட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கட்டிடத்தில் சட்டவிரோத மொபைல் போன் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஒழுக்காற்றுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது
அதன் பிரகாரம் சோதனை மேற்கொள்ளப்பட்டு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைதிகள் ஒன்று திரண்டு சிறைச்சாலை ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
அதன் போது ஒரு கைதியின் தாக்குதல் காரணமாக ஜெயிலர் ஒருவர் காயமுற்று சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.