ஜெர்மனிய அரசின் டார்ஸ்டாட் பல்கலைக்கழக இலங்கை இளைஞர் போட்டியொன்றில் வெற்றியீட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
லொஸ்ட் இன் லெங்வேஜ் என்ற குறுந்திரைப்படம் சிறந்த திரைகதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சினை தொடர்பில் விவாதிக்கும் ஓர் கதைக் கருவினைக் கொண்ட குறுந்திரைப்படமாக இது அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு உதவுமாறு குறித்த தமிழ் இளம் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் முகநூல் பதிவு பின்வருமாறு….
ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியின் மாணவர்கள் ஆகிய எங்களின் குறும்திரைப்படம் – “19:53 – Lost in Language” சிறந்த திரைக்கதைக்கான போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நாநலவுடைமை அந்நலம் யான்நலத்து உள்ளதூஉம் அன்று (குறள் : 641)
தனது சொந்த மொழியில் உரையாடும் சந்தர்ப்பம் மறுக்கப்படும்போது ஒரு மனிதனோ அல்லது ஒரு சமூகமோ எவ்வாறான சவால்களை சந்திக்கும் என்பதை விவரிக்கும் ஒரு குறும் திரைப்படம்.
வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும், சொந்த நாட்டில் தாய்மொழியில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கும், இந்த திரைப்படத்தில் “சமத்” ஜெர்மன் மொழி தெரியாமல் ஜெர்மனியில் உயிராபத்தின்போது உதவி தேடும் தருணங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்துடன் இது 1953 ஆம் ஆண்டு சிங்கள மொழி சட்டம் (Sinhala only act) தமிழ் பேசும் மக்கள்மீது ஏற்படுத்திய தாக்கத்தை இந்த குறும் திரைப்படம் நினைவுபடுத்துகிறது. இந்த திரைப்படம் மொழி தடைகளால் ஏற்படும் துன்பநிலைகளையும், அதனால் ஏற்படும் பிரிவினையையும் காட்சிப்படுத்த முயல்கிறது.
இந்த திரைப்படம் ஜெர்மனிய அரசின் டார்ம்ஸ்டாட் பல்கலைக்கழகம் – திரைப்பட கல்லூரியால் பகுதியாக தயாரிக்கப்படுகிறது. இதில் பங்குபெறும் பன்நாட்டைச் சேர்ந்த திரைத்துறை மாணவர்களும் கலைஞர்களும் தங்கள் உழைப்பை இலவசமாகவே வழங்குகின்றனர். இருப்பினும் தயாரிப்பு செலவுகளில் €800 அளவான பணம் தேவைப்படுகிறது.
இதற்காக ஒரு கூட்டு நிதிநல்கை (Crowd funding) தொடங்கப்பட்டுள்ளது. lostinlanguage.de என்ற இணையதளத்தில் அல்லது இந்த இணையதளத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
உங்களில் சிறிய பங்களிப்பு எங்களுக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் – நன்றி
அன்புடன் –
பதுர்ஜன் விஜயசேகர & குல்யா அமடோவா