டயகம தூய அந்தோனியார் ஆலய வருடார்ந்த திருவிழா ஒரே குடும்பம்,ஒரு அவை,ஒரே மறைப்பணி எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது.
கண்டி மறைமாவட்ட குருமுதல்வர் அதிவணக்கத்துக்குறிய எல்வின் பீட்டர் பெர்ணான்டோ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருவிழாவின் போது டயகம பகுதியில் காணப்படுகின்ற ஏராளமான பொதுமக்கள் இன,மத வேறுபாடின்றி கலந்து சிறப்பித்தனர்.
மேலும் புனித அந்தோனியாரின் திருவுருவ சிலை டயகம நகர் முழுவதும் பவனியாக கொண்டு செல்லப்பட்டு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்க்கப்பட்டு திருவிழா இனிதே நிறைவு பெற்றது.