அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராக மியாமி வந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் இரகசிய ஜனாதிபதி ஆவணங்களை வைத்திருந்ததற்காக மியாமி ஃபெடரல் நீதிமன்றத்தில் 37 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (12) தனது தனி விமானத்தில் மியாமி வந்தடைந்த டொனால்ட் ட்ரம்ப் தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளார்.

மியாமி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக மியாமி மேயர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான ஜனாதிபதி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *