மட்டக்களப்பு, கண்டி, குருணாகல், புத்தளம், காலி மாவட்டங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையுடன் இந்த நிலைலை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 43346 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 21654 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளார்.