டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்கக் கடலோரக் காவல்படை ஆரம்பித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் தகவல் தொடர்பு சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பயணத்திற்காக அமெரிக்க டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலில் இருந்து 5 பேர் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது.
4 நாட்களுக்கு போதுமான ஒக்ஸிஜன் இருப்பதால் கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாக காப்பாற்ற சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.