நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான பரிசளிப்பு விழா நுவரெலியா மாநகர சபை பொதுமைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது முன்னாள் இலங்கை  உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் இப்பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது.

தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் யங் பேர்ட்ஸ் மற்றும் யங் யுனைடெட் அணிகள் மோதின இதில் யங் பேர்ட்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என வெற்றி பெற்றது.
போட்டி தொடரில் வெள்ளி கிண்ணத்தை ஸ்கிராப் தோட்டத்தை சேர்ந்த சன்பேர்ட்ஸ் அணியினர் பெற்றுக் கொண்டனர்

இதில் சிறந்த விளையாட்டு வீரராக ஜே.ஸ்டீபன் ராஜ் மற்றும் சிறந்த கோல் காப்பாளராக வி.எஸ். கார்த்திக் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தங்கக் கிண்ணத்தை யங் பேர்ட்ஸ் அணியினரும் சிறந்த விளையாட்டு வீரராக வி. விவேக் சிறந்த கோல் காப்பாளராக யங் யுனைடெட் அணியின் ரஹீம் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதே வேலை ஏ(A) பிரிவிற்கான போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அணியாக நேஸ்பி லேக் சைட் அணியினரும் பி(B) பிரிவிற்கான போட்டியில் முதலாம் இடத்தை ஹைபோரெஸ்ட் அணியினரும் சி(C) பிரிவுக்கான போட்டி தொடரில் பிரண்ட்ஸ் அணியினரும் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

போட்டிகளில் ஏ பிரிவு சார்பாக சிறந்த விளையாட்டு வீரராக நேஸ்பி அணி சார்பாக பிரவீன் குமார் மற்றும்
பி  பிரிவு போட்டி சார்பாக சிறந்த விளையாட்டு வீரராக ஹய்பொரெஸ்ட் அணியின் வினோத்குமார் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இவ் பரிசளிப்பு விழாவானது முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்  தலைமையில் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *