உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.