மலைவாஞ்ஞன் 
மலையக மக்களின் இன அடையாளம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தற்போது முன் வைக்கப்பட்டு பேசும் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில் மலையக மக்களின் இன அடையாளம் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு அடையாளங்கள் இருந்துள்ளன..1911 முன் எங்களை ஒப்பந்த கூலிகளாக நாம் அடையாளப படுத்தப் பட்டோம் 1911 பின் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்கள் கணக்கெடுப்பு ஒன்று இடம்பெற்றது அப்போது அவர்களின் தேவைக்காக எங்களுக்கு வைத்த பெயர் தான் இந்திய தமிழர்கள் இந் நிலையில் நீண்ட காலமாக இந்திய தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.1970 1980 காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றம் காரணமாக எங்களை மலையக தமிழர்களாக அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருப்பதாக மலையகத் தமிழர் இன அடையாளத்திற்கான மக்கள் செயலணி ஒருங்கிணைப்பாளர் இரா ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்து பறிமாற்றங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றது இதனை தொடர்ந்து மலையக மக்கள் என்ற இன அடையாளத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கோசம் பரலாக வந்ததன் காரணமாக இந்த பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தான் நாங்கள் இந்த அமைப்பினை கடந்த வருடம் உருவாக்கினோம்.
அதனை தொடர்ந்து மலையக மக்கள் வாழுகின்ற பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களின் கருத்துக்களையும் பெற்று அந்த கருத்துக்களுக்கு அமைவாக நாங்கள் மலையக மக்கள் என்ற அடையாளத்தினை கொழும்பில் பிரகடணப்படுத்தினோம்.
இதனை சட்டபூர்வமாக மாற்றுவதற்கான பணிகளை ஆரம்பிக்க இருக்கின்றோம்.அதற்காக குடிசன மதிப்பீட்டு திணைக்களத்திற்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் இதனை தனியொரு மனிதனாலோ அல்லது ஒரு அமைப்பினாலோ மாத்திரம் முன்னெடுக்க முடியாது இதற்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதர அவசியம் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கண்டியில் கலந்துரையாடி உள்ளோம்.அதில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக தமிழர்கள் என்ற அடையாளத்தினை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்;
.எனவே எதிர்காலத்தில் மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களுடன் கலந்துரையாடி இதனை நடமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *