( வாஸ் கூஞ்ஞ) 18.09.2023

மன்னார் தாராபுரம் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலாவதியான தாராபுரம் பகுதி நிர்வாகங்கள் தான்தோன்றித் தனமாக செய்ல்பட்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது.

மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்துக்கு நீண்ட நாட்களுக்குப்பின் திங்கள் கிழமை (18) புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் இன்றையத் தினம் (18) தனது பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த புதிய அதிபர் தங்கள் பாடசாலைக்கு பொருத்தமானவர் அல்ல எனது தெரிவித்து சில பெற்றோர்கள் திங்கள் கிழமை  (18) காலை ஒரு சில மணி நேரம் பாடசாலைக்கு முன்பாக பதாதைகள் ஏந்திய வண்ணம் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்ட இவர்கள் தாங்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘வராததே வராததே பெற்றோர்கள் வெறுக்கும் அதிபரே வராதே’ ‘புதிய அதிபரே உன்னை எடுத்தவரே உன்னை உதைப்பார்கள்’ ‘குளத்தடி கோமாளிகளே எம் விதியை தீர்மானிப்பது நீயா?’ எங்கள் ஊர் அதிபர் எமக்கு வேண்டும்’ ‘ஏழை மாணவர்களின் கல்வியை அழிக்காதே’ போன்ற வாசகங்கள் அவர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் காணப்பட்டன.

இது தொடர்பாக இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த பத்து வருடங்களாக இப்பாடசாலையில் கல்வி மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது.

இதற்கு காரணம் சரியான தலைமைத்துவம் கொண்ட அதிபரோ அல்லது பிரதி அதிபரோ இப்பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை.

இதன் காரணமாக இங்கு நன்றாக படிக்கும் பிள்ளைகள் இப்பாடசாலையை விட்டு விலகி மன்னார் நகர் பாடசாலையை நோக்கிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

இங்குள்ள மாணவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர் அடைவுக்குச் செல்லும்போது இவர்களின் தராதரம் குறைவடைந்துச் செல்லுகின்றன.

எங்கள் ஊரில் காலாவதியான சமூக அமைப்புக்கள் அதாவது பாடசாலை அபிவிருத்திக் குழு . பழைய மாணவர் அமைப்பு பள்ளி நிர்வாகமாக இருக்கலாம் இவர்கள் தொடர்ந்து இயங்கி வருவதால் தாங்கள் தான்தோனிறி தனமாக இருந்து செயல்படுவதாலேயே இந்நிலை எற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *