மன்னாரில் நடைபெற இருக்கும் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலத்தில் இம்மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.
இதற்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் புத்தசாசன சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் கௌரவ விதுர விக்ரமா நாயக்க இ கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் ஆகியோரின் பங்கேற்போடு வியாழக்கிழமை (12) முசலி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகாரங்கள் அமைச்சின் செயலாளர்இ மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்இ முசலி பிரதேச செயலாளர்இ முஸ்லிம் கலாச்சாரத் திணைக்கள உயர் அதிகாரிகள்இ முப்படை பிரதானிகள்இ ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுப் பிரதாணிகள் இ பொறுப்பு வாய்ந்த திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)