யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத விகாரை அகற்றப்படவேண்டும் , பொது மக்கள் காணியை பொது மக்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்தனர்.
பாரளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் உட்பட பலர் முழு இரவும் அந்த இடத்திலே இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று இரவு 7.00 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது
பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனது டூவிட்டரில் போராட்ட படங்களை வெளியிட்டுள்ளார்.
தையிட்டியில் இரவிரவாகத் தொடரும் போராட்டம் pic.twitter.com/o9KbJGUKPi
— Selvarajah Kajendren MP (@skajendren) August 30, 2023