நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் இன்று (01) 59 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது.
தொழிலாளர் தேசிய சங்கமானது 1965 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி மலையக தொழிற்சங்க துறவியென போற்றப்படும் வெள்ளையனால் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே அச்சங்கம் உருவாக்கப்பட்டது. சி.வி. வேலுபிள்ளை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மேற்படி சங்கத்தில் அங்கம் வகித்தனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தற்போது பழனி திகாம்பரம் தலைமை வகிக்கின்றார். தொழிலாளர் தேசிய சங்கம் அதன் அரசியல் கிளையாக செயற்படுகின்றது. தற்போது இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
58 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், மே தினத்தை முன்னிட்டும் அட்டனில் சிவசுப்பிரமணிய ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன்பின்னர் கட்சி தலைமையகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, ‘கேக்’வெட்டப்பட்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொது செயலாளர் பிலிப், நிதிச் செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன், இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசன், காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
(க.கிஷாந்தன்)