(  நூரளை பி. எஸ். மணியம்)
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை தரம்
உயர்த்த அனைவரும் ஒன்று திரல்வோம். திருமுருகன்  கோரிக்கை.
மலையக இந்தியவம்சாவழி பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்டங்களில் குடியேரி 200 வருடங்கள் கடந்தும் தங்களுக்கென ஒரு முகவரி இல்லாமல் வாழும் சூழ்நிலையிலே இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.
நாம் இலங்கையில் குடியேரி
200 வருடங்கள் கடந்து விட்டோம் என்பதை நினைவு கூர்ந்து பல இடங்களில் “மலையகம் 200” நூல்கள் வெளியிடப்பட்டன. அதேபோல எழுச்சி நடை பவனி ஊர்வலங்கள் உட்பட பல நிகழ்வுகள் இலங்கை முழுவதும் அன்மை காலங்களாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்வுகளில் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்று சேரும் மக்கள் பெருந்தோட்ட பகுதியில் வாழும் இந்தியவம்சாவளி
மக்களுக்கு ஒரு முகவரியை பெற்றுக்
கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை தரம் உயர்த்த அனைத்து தொழிற்சங்க அரசியல்
கட்சி தலைமைகளும் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.
என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதி குழு தலைவரும் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் கலாநிதி சதானந்தன் திருமுருகன் கோரிக்கை  விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இன்று தொழிலாளர்களுக்கு முறையாக தொழிலோ முறையான சம்பளமோ தோட்ட நிர்வாகங்கள் வழங்கு வதில்லை.தொழிலாளர்களில் அதிகமானோர் இன்று வயிற்று பசிக்காக வெளியில் தொழில் தேடி செல்கின்றார்கள்.தோட்டங்களில் தொழில்செய்யாத தொழிலாளர் களின் வீடுகளை தோட்ட நிர்வாகம் பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர்.
தோட்ட நிர்வாகங்கள் சர்வாதிகார திமிரில் செயல்படுகின்றனர். இதனை தொழிற்சங்க அரசியல் தலைமைகள் கண்டும் காணாதது போல செயல்படுகிறனர்.இது சம்பந்தமாக தொடர்ந்தும் தொழிற்சங்க அரசியல் தலைமைகள்
பிரிந்து செயல்படாமல் சமூக ரீதியில்
ஒன்றிணைய வேண்டும்.
பெருந்தோட்ட பகுதியில் தொழிலாள ர்களும் தொழிற்சங்கங்களும் பிரிந்து
செயல்படுவதால் தோட்ட நிர்வாகங் கள் இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொழில் சட்டங்களை மீறி
சர்வாதிகாரம் முறையில் தோட்டங் களை வழி நடத்தி வருகின்றனர். இன்று பெருந்தோட்ட பகுதியில் வேலை பளு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் முறையாக வழங்கப்படுவ தில்லை.
இன்று பெருந்தோட்ட பகுதியில் சுத்தமான குடிநீர் ,சுகாதார வசதிகள் , வீட்டு வசதிகள்,போதிய வருமானம் இன்மை உட்பட பல பொது வசதிகள் இல்லாமல் வாழ்ந்துவருகின்றார்கள்.
 200 வருட வரலாற்றை கொண்ட பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை யில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த மலையகத்தில் பிரதிநிதிதுவம் படுத்தும் தொழிற்சங்க அரசியல் தலைமைகளும் தோட்டமக்களும் சமூக பொது அமைப்புகளும் தங்களது பிரிவினையை விட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வரவேண்டும். என திருமுருகன் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *