பண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்ட பின்னர், பதுளை பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கபரகல தோட்டமும் மண்சரிவு அபாய வலயத்தில் இருந்தது. எனவே, அம்மக்களை பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கவைக்குமாறும், வீடுகளை அமைப்பதற்கு பாதுகாப்பான இடத்தில் காணி ஒதுக்கி தருமாறும் நாம் தோட்ட நிர்வாகத்திடம் கோரியிருந்தோம்.
எனினும், தோட்ட நிர்வாகம் காணி வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொடர்பிலும் அசமந்தமாக செயற்பட்டுள்ளது. எனவே, அரச நிர்வாக பொறிமுறை உரிய முன்னேற்பாடுகளை கோரியும், அதனை வழங்க நடவடிக்கை எடுக்காத தோட்ட நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும்.” – என்றார்.