போர்த்தொழில் படத்தின் வெற்றியை தொடர்ந்து வாழ்வில் வெற்றி பெறும் முகமாக நடிகர் அசோகு செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியனை இன்று கரம் பிடித்தார்.
நெல்லையில் நடந்த இந்த திருமணவிழா குறித்து நடிகை ரம்யா பாண்டியன் தமது X தளத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
Happy married life my dear Kanmani @iKeerthiPandian ♥️and welcome to our family our dearest Maapilai @AshokSelvan 🤗 pic.twitter.com/dvXXkJe3ma
— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2023
நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக காதல் இருந்தது.
இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்ட இன்று திருமணம் திருநெல்வேலி பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள இட்டேறியில் நடந்துள்ளது.
சென்னையில் பெரிய வரவேற்பு விழா நடக்க இருக்கிறது.