நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களை முறையாகவும் திறமையாகவும் கையாள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பெரிஸில் ஆரம்பமான புதிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டுடன் இணைந்து இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நடுத்தர வருமான நாடுகள் எதிர்நோக்கும் கடன் மறுசீரமைப்பு போன்ற சவால்களை முறையான மற்றும் வினைத்திறனுடன் கையாள வேண்டிய தேவை இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பில் பெற்ற அனுபவத்தை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, கடனாளிகளுக்கும் கடனாளிகளுக்கும் இடையில் சிறந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டினார்.
நடுத்தர வருமான நாடுகள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை வெற்றிகொள்வதற்கு தனியான செயற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கினார்.