சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
அயர்லாந்து அணி இதுவரை 04 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள நிலையில் அவர்களால் எந்தவொரு போட்டியிலும் வெற்றிபெற முடியவில்லை.
இதேவேளை, அயர்லாந்துடனான இந்த டெஸ்ட் கிரிக்கட் போட்டியை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.