சமுர்த்தி மற்றும் நலன்புரி வேலை திட்டங்களுக்குள் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்ட துறையினருக்கான நலன்புரி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நிதி ராஜாங்க அமைச்சர் தலைமையில் நிதி அமைச்சில் நடைபெற்றது .
இதன் போது குறித்த நலன்புரி திட்டங்களுக்காக பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கப்பட்ட தரவுகளில் குறைபாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனை மீள் ஆய்வு செய்து உரியவர்களை இத்திட்டத்தினுள் உள்வாங்கப்படுவதற்கு இன்றைய கூட்டத்தின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது
கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்
மே தின மேடையில் ஜனாதிபதிக்கு என்னால் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற மூன்று சுற்று பேச்சு வார்த்தைக்கு பின்னதாக இன்றைய தினம்
நிதி இராஜாக அமைச்சரின் தலைமையில் பெருந்தோட்ட மலையக மக்களின் நலன்புரி வேலை திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வெற்றி அளித்துள்ளது ..
பெருந்தோட்டங்களில் நலன்புரி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும்போது பெருந்தோட்ட மலையக மக்கள் முற்று முழுதாக புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதனையும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் பிழையானது என்பதனையும் நான் சுட்டிக்காட்டி இருந்தேன் அமைச்சர் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டதோடு
விபரங்களை மீள் ஆய்வு செய்ய முறையான ஒரு பட்டியலை தயாரித்து தருமாறு கோரியுள்ளார்
எங்களுடைய பட்டியல் தரவுகளையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட மலையக மக்களையும் நலன்புரி வேலை திட்டங்கள் சமுர்த்தி கொடுப்பனவில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 15,000 ரூபாய் வழங்கும் வேலை திட்டத்திலும் பெருந்தோட்ட மலையக மக்கள் உள்வாங்கப்படுவார்கள் என்பதோடு வங்கி கணக்கு இல்லாதவர்கள் தபால் நிலைய புதிதாக கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதோடு நேரடியாக அவர்களுடைய கணக்குக்கு பணம் வைப்பில் இடப்படும் என்பதனையும் தெரிவித்தார் ..
இவை தொடர்பிலான சுற்றறிக்கை பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் கிராம உத்தியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினம் சென்றடையும். மேலும் மலையக இளைஞர் யுவதிகள் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்கள் இத் தரவுகளை மேற்கொள்ளவும் அனைவருக்கும் இந்த சலுகை சென்றடையவும் என்னுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்தார்