எம நாசீர்
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைத்து, புதிய விலை 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் குறைத்து. 231 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.