இன்று(04) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.
12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரொன்றின் விலை 183 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
லாப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் டபுள்யூ.கே.எச் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை மாற்றியமைத்ததன் பின்னர், தனது நிறுவனத்தின் எரிவாயு விலைகளும் திருத்தப்படும் என லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.