நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் இடம்பெற்று வருகிறது.  அத்துடன்நாகை – நாகூர் சாலையை மறித்து போராட்டம் நடைப்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கற்கள், கட்டைகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொகொண்டதால் பலர காயமடைந்துள்ளனர்

பொலிஸார் மோதலை தடுக்கும் வகையில் கலககாரர்களை  கைது செய்து வருகின்றனர்

முழு விபரம்

மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. மீன்பிடி துறைமுகத்தில்
தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, மேல பட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கும் தமிழக அரசால் கட்டப்பட்ட துறைமுகத்தில் மீன் விற்பனை மற்றும் மீன் ஏலம் விடுவதற்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது

 

இந்நிலையில், மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது எதிர்தரப்பு மீனவ கிராம மக்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனால் கிராமத்தில் யாருல் இல்லாததையறிந்த கீழப்பட்டினச்சேரி மீனவர்கள், மேலபட்டினச்சேரிக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, இருசக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். கையில் ஆயுதங்களோடு 50 பேர் கொண்ட கும்பல் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.

 

இது குறித்த தகவலறிந்ததும், இரண்டு கிராமங்களிலும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தலைமையிலான அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனிடையே, மோதலின்போது காயமடைந்த மேலபட்டினச்சேரி கிராம மீனவர்கள் இரண்டு பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *