எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் பட்சத்தில் உறுப்;பினர்கள் புதிய வகை ஒழுக்க விதிகளை கடைபிடிக்க வேண்டி வரும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்கள் ஒழுக்காற்று விசாரணைக்கு அமைய அவர்களின் பதவி பறிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தற்போது நாட்டுக்கு வீரர்கள் அவசியமில்லை எனவும் மாறாக மக்களின் கஷ்டங்களை அறித்த ஒருவரே அவசியம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறை பதியத்தலாவ பகுதியில் இன்று (27) இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.