நாட்டின் மக்கள் தொகையில் 25 வீதமானோர் விட்டமின் D குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மாரை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
விட்டமின் D குறைபாட்டைக் குறைப்பதற்கு முடியுமான அளவு சூரிய ஒளி உடலில் படும்படி செயற்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
சூரிய ஔியின் மூலமே மனித உடலுக்கு அவசியமான விட்டமின் D ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஔியில் இருந்து அதிக அளவில் விட்டமின் D ஊட்டச்சத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
சாதாரணமாக நாளொன்றுக்கு 15 நிமிடங்களேனும் சூரிய ஔி உடலுக்குக் கிடைப்பது அவசியம் என பொரளை வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து தொடர்பான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.