நியூஸிலாந்து அணிக்கெதிராக இன்று நடைப்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணி 7. விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது

இதன்படி 1-1  என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன இறுதி போட்டி ஞாயிறு இடம்பெறும்.

டெஸ்ட் அந்த பெறாத அணியான ஐக்கிய அரேபிய ஏமிரேட்ஸ் அணியிடம் இன்று பெற்ற தோல்வி நியூஸிலாந்து அணிக்கு சரித்திர தோல்வியாகும்

டெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளுடன் மோதிய 39  போட்டிகளில் ஒன்றிலும் தோற்காத  நியூஸிலாந்து அணி இன்று  தோல்வியை தழுவியது.

மூன்று போட்டிகளை கொண்ட T20  தொடரின் இரண்டாவது போட்டி இன்று டுபாயில் நநடைப்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற எமிரேட்ஸ் அணி நியூஸிலாந்தை துடுப்பெடுத்தாட சொன்னது.

இதறகமைய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 142 ஓட்டங்களை 8 விக்கெட்டுகளை இழந்து பெற்றது. மார்க் செப்மேன். 63 ஓட்டங்களை பெற்று அணியை காப்பாற்றினார்.

பந்துவீச்சில் எமிரேட்ஸ் அணியின் சகலத்துறை ஆட்டக்காரான அயன் கான் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எமிரேட்ஸ் அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. இதில் அணித்தலைவரான மொகமட் வசீம்  29 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்களையும் அஷிப் கான் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இந்த வெற்றி குறித்து அணித்தலைவர் கூறுகையில்

20 ஆம் திகதி நடைப்பெறும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *