சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சில குடும்ப உறுப்பினர்களை Maryland செனட்டரான கிரிஸ் வேன் ஹோலென் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் செனட்டர் பல தரப்பட்ட பிரிவினர்களை சந்தித்து வருகிறார்.. இந்த சந்தப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி ஷாங் அம்மையாரும் கலந்து கொண்டார்
இதன்போது, “நீதிக்கான போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடனும் அமெரிக்கா என்றும் துணை நிற்கிறது. இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உறவுகளை எண்ணி கவலையுடனே பயணிக்கின்றனர்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியன கிடைக்கப்பெற வேண்டும்” என கிரிஸ் வேன் ஹோலென் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறுகிறது.
On this International Day of the Victims of Enforced Disappearances, the United States stands in solidarity with the victims, along with their families and friends, in their struggle for answers and justice. Each day, they carry the burden of uncertainty, wondering about the fate… pic.twitter.com/WO327gZDCz
— U.S. Embassy Colombo (@USEmbSL) August 30, 2023