நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும், நுவரெலியா ரோட்ரிக் கழக அனுசரனையுடன், கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த இரத்த தான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்கொடை செய்திருந்திருந்தனர். இதன்போது கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
(அந்துவன்)