டி சந்ரு திவாகரன்
மலையக ஆசிரியர் முன்னணியின் ஏற்பாட்டில் தரம் ஐந்து புலமை பரீட்சை மாணவர்களுக்கான வழிகாட்டி நூலாக ஏணி நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
கல்வி இராஜாங்க அமைச்சின் முழுமையான அனுசரணையுடன் நுவரெலியா வலயத்தின் கீழ் இயங்கும் கோட்டம் ஒன்று இரண்டு மூன்றுக்குட்பட்ட சுமார் 900 மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டியான ஏணி நூல் வழங்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் , சிறப்பு அதிதியாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் , நுவரெலியா , வலப்பனை , கொத்மலை கோட்டங்களில் உள்ள கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் , வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .