( நூரளை ரமணன்)
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி  நிலைமைக்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்து ஆட்சி செய்தமையே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச புகழ் பெற்ற சீதையம்மன் ஆலயத்தின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நடைபெற்ற சர்வதேச மத நல்லினக்க அமைப்பின் 7வது மாநாட்டில் சிறப்பு பிரதம அதிதியாக  கலந்து கொண்ட பொழுதே இவ்வாறு தெரிவித்துள் ளார்.இந்த மாநாட்டின் இலங்கை பிரதிநிதியாக இலங்கை சர்வோதய அமைப்பு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மத நல்லினக்கம் இன ஒற்றுமை முதன்மைப்படுத்தி 7 வது சர்வதேச மாநாடு நுவரெலியாவில் நேற்று 01.09.2023 ஆரம்பமானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
இந்த மாநாட்டில் இந்தியா பங்கலாதேஷ், மலேசியா, சிங்கப்பூர்
நேபாளம், இந்தோனேஷியா இந்தியா உட்பட  பல வெளி நாடுகளை சேர்ந்த 39 பேர் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இவ் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்து பௌத்த முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்திய மதத்தலைவர்களும் அழைப்பாளர் களும் கலந்து கொண்டனர்.இந்த மாநாடானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறுவதுடன் நாளை 03.09.2023 அன்று சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் விசேட பூஜை நிகழ்வுகளுடன் இந்த சர்வதேச மாநாடு நிறைவு பெறவுள்ளது.
அங்கு இராதாகிருஷ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கை ஒரு சிறிய நாடு கடந்த 1948
ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின் உலகத்திலே முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க உலக நாட்டிற்கு அறிமுகமானார். அவரின் காலத்தில்தான் ” சிலோன் டீ ” உலக
நாட்டுக்கு அறிமுகமாகி எங்களுக்கு பெறுமை தேடிகொடுத்தார்.
உலக நாடுகளில் ” சிலோன் டீ”
இலங்கைக்கு பெருமை தேடி கொடுத்தது. இந்த பெறுமைக்கு காரணமாக  இருந்தவர் எங்களுடைய நாட்டின் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க. அவர் எங்களுடைய நாட்டின் இலங்கை தேயிலை விளையாட்டில் நாம் கிரிக்கட்டில் பெற்றுக் கொண்ட உலக சாம்பியன் போல தேயிலை விற்பனையிலும் முதலிடம்  வகித்தோம்.இந்த அனைத்து வெற்றிகளுக்கும் முக்கிய காரணம் நாம் இலங்கையராக ஒற்றுமையாக செயற்பட்டமையே.
ஆனாலும் ஒரு கசப்பான விடயம் இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின் இலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி மக்களின்
பிரஜாவுரிமை பரிக்கப்பட்டு 40 வருடங்கள் நாடரற்றவர்களாக இருந்தோம்.
எங்களுடைய நாட்டின் பின்னடைவு 83 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக்கலவரம் தனிச்சிங்கள மொழிச்சட்டம் மிக அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்.இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் முக்கிய காரணம் எங்களுடைய மக்களை இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து செயற்பட்டமையே.
இந்த செயற்பாடுகள் காரணமாக தமிழர்களுக்கு சிங்களவர்களுக்கும் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியமை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தியமை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியமை என இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தி தங்களுடைய பதவிகளையும் ஆட்சிகளையும் தக்கவைத்துக் கொள்ள சதித்திட்டம் தீட்டி செயற்பட்டமை.
ஆனால் இன்று இந்த நாடே பொருளாதார பின்னடைவை சந்தித்து அனைத்து மக்களும் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலும் ஆட்சியாளர்கள் வடகிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் மதங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையானது மிகவும் மன வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான ஒரு விடயமாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நிலைமையை எங்களுடைய அனைத்து மக்களும் உணரந்து கொள்ள வேண்டும்.நாம் இலங்கையர்களாக ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் அதனை செய்யக்கூடிய அனைத்து சந்தரப்பமும் மதத் தலைவர்களிடமே இருக்கின்றது.
எனவே இவ்வாறான ஒரு நிலைமையில் மத நல்லினக்கத்திற்கான 7 ஆவது சர்வதேச மாநாடானது இலங்கையில் நுவரெலியாவில் நடைபெறுகின்றமையானது காலத்தின் தேவையாக அமைந்திருக்கின்றது.எனவே இது போன்ற அமைப்புகளை பலப்படுத்த வேண்டியதும் இணைந்து செயற்பட வேண்டியதும் நம் அனைவருடைய பொறுப்பாகும்.

அவ்வாறு இணைந்து செயற்பட்ட நாடுகள் மாத்திரமே இன்று சர்வதேச மட்டத்திலும் பொருளாதார மட்டத்திலும் உயர்ந்து நிற்கின்றது.எனவே இந்த மாநாட்டின் ஊடாக நாம் அனைவரும் மத இன ரீதியாக பிரந்து நிற்காமல் இலங்கையர்களாக இணைந்து செயற்பட முன்வர வேண்டும எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *