நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றுள்ளது.
ராய்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்றியில் வென்று முதலிலில் களதடுப்பில் ஈடுப்பட்டது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களுக்குள் முன்னிலை வீரர்களை பறிகொடுத்து தடுமாறியது.
எனினும் அணியை போராடி மீட்ட கிளேன் பிலிப்ஸ் (Glenn Phillips ) 52 பந்துகளில் அதிகூடிய 36 ஓட்டங்களை பெற்றார்
இறுதியில் நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சுருண்டது.
இந்திய பந்து வீச்சில் மொஹமட் சிராஜ் 3 வீக்கெட்டுகளையும் ஹர்தீக் பாண்டியா மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை அள்ளினர்.
இதனையடுத்து 109 என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 51 ஓட்டங்களையும் சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.
இந்த வெற்றியால் 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.
3வதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24 திகதி இடம்பெறவுள்ளது.