எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தநிலான் மிராண்டா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பணிப்பாளர் நாயகம், நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்திற்காக 7000 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.