1990ம் ஆண்டு கடை ஒன்றில் பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
பத்திரிகையாளர் ஜீன் கரோல் என்பவர் ட்ரம்புக்கு எதிராக தொடுத்த சிவில் வழக்கில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.
கடையின் டிரஸ்ஸிங் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஜீன் கரோல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி, இது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ட்ரம்பை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம், குறித்த ஊடகவியலாளருக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை BBC வெளியிட்டுள்ளது.