கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல்  அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டத்தில் இருந்து வெறும் ஒன்றரை மீற்றர் உயரமே கொண்ட இயக்கச்சி பிரதேசத்தின் ஆற்று சமவெளி பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான மண்ல்  அகழப்பட்டு யாழ்ப்பாணத்தை  நோக்கி கொண்டு  செல்வதாக கிராம மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மணல் அகழ்வை உடனடியாக தடுக்காவிட்டால் மிக விரைவில் இயக்கச்சி பிரதேசத்தின் நிலங்களும்  மாற்றமடைந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்படும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே குறித்த விடயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டு விரைவில் குறித்த மணல் அகழ்வை தடுக்குமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *