ரமழான் மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் மத வழிபாடுகள் நடைபெறும் இஸ்லாமிய பள்ளிவாசல்களை அடையாளம் கண்டு சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதனிடையே குண்டு தாக்குதல் நடத்தப்படும் என கிடைத்த தகவல் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ரமழானில் அடையாளம் காணப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு மாகாணங்களுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் பொய்யானது. என அவர் தெரிவித்துள்ளார்.