இந்திய கிரிக்கட் அணிக்கெதிராக எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை நடைப்பெறும் ஆசிய கிண்ண இறுதி போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கட் அணி 11 வது தடவையாக தகுதிப்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் இலங்கை அணிகளுகிடையில் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்ற ஆசிய கிண்ண சுப்பர் லீக்க் பகல் இரவு சர்வதேச ஒருநாள கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மழையின் காரணமாக தாமதமாக ஆரம்பமான போட்டி அணிக்கு 42 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.
இன்றைய இலங்கை அணியில் இரு மாற்றங்கள் இருந்தத். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவிற்கு பதிலாக குஷாவ் ஜனித் பெரேரராவும் வேகபந்து வீச்சாளரான கசும் ராஜிதவிற்கு பதிலாக பிரமோத் மதுஷான் சேர்க்கப்பட்டனர்.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது இதில மொகட் ரிஸ்வான் அப்துல்லா சாபீக்யூ ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக தங்களது 42 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
இதில் மொகம்ட ரிஸ்வான் 86 ஓட்டங்கள் அப்துல்லா சாபிக்யூ 52 ஓட்டங்கள்
பந்து வீச்சில் மாத்திஸ பத்திரன 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள். குறிப்பாக இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளரான தீக்ஸன உபாதையுடன் பந்து வீசியதை இங்கு பாராடட வேண்டும் அவர் 41 ஓட்டங்குளுக்கு 1 விக்கெட்.
டக் வத் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கான 252 ஐ பெறும் நோக்கில் ஆடுகளம் நுழைந்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய குஷவ் பெரேரரா அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த போதிலும் அநாவசியமாக ரன் அவுட்டானார்.
எனினும் குஷால் மென்டிஸ் நிதானமாக ஆடிஅவர் 87 பந்துகளில் 1 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் துரதிஷ்டவசமாக 91 ஓட்டங்களுடன் சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் இறுதி ஒவரின் இறுதி பந்து வரை ஆடிய சரித்த அஸலங்க ஆட்மிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று இலங்கை அணியை இறுதி ஆட்டத்திற்கு கொண்டு சென்றார்
இலங்கை அணி 42 ஓவர்களில் விக்கெட்டுகளை 8 இழந்து 252 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
இதில் குஷால் மென்டிஸ் 91 ஓட்டங்கள் சதீர சமரவிக்ரம 48 ஓட்டங்கள் சரித்த அஸலங்க ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்று அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்
ஆட்டநாயகனாக குஷவ் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார.