உலக கிண்ண ODI கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா செல்ல சம்மதம் தெரிவித்துள்ளது.
அதன்படி இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி ஓக்டோபர் 15ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 48 போட்டிகள் 12 மைதானங்களில் நடைபெறும்.
இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நவம்பர் 19 திகதி நடைபெறும்.
பாகிஸ்தான் அணி இந்தியா செல்லுமா என்பதில் நிச்சயமற்ற நிலை இருந்தது.
கடைசியாக பாகிஸ்தான் 2016ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்துக்காக இந்தியா சென்றது.
ஆனால் 2008க்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தானின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.