அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியமும் கலைஸ்ரீயின் கலைஸ்ரீ மன்றமும் இணைந்து தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக அனுசரணையுடன் 29.09.2023 கொழும்பு பழைய நகர சபை மண்டபத்தில் நடத்திய பாடு நிலா பாலாவின் பாமாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்நு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர். எஸ்.விஜயராஜா கூறுகிறார்.

நிகழ்வு குறித்து  மேலும் கருத்து தெரிவித்த அவர்.

பாடு நிலா பாலாவின் இதமான குரலில் இதயத்துக்கு இதமான இனிமையான பாடல்கள் பல கேட்க கிடைத்தன.

இசை அமைப்பாளரும். .இ.கி.கலைகள் ஒன்றியத்தின் ஆலோசகரும் ஓய்வு பெற்ற அதிபருமாகிய அசோகனும் அவரது புதல்வரும் புதல்வியும் அருமையான பாடல்கள் பலவற்றை தந்தார்கள்

கலைக்கமல் எந்தவிதமான இசையும் இல்லாமல் மூன்று அழகிய பாடல்களைத் தந்து அசத்தி விட்டார். அதில் ஒரு பாடல் ஹிந்திப் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஆஸ்தான பாடகர் முரளி பாலாவின் குரலில் பேசியதுடன் அழகான பாடல்கள் பல பாடி அனைவரையும் கவர்ந்து விட்டார்.

நவகம்புர கணேஸும் என்றும் போல் இன்றும் மேடையையும் பார்வையாளர்களையும் கவரும் வண்ணம் பாடல்கள் பல பாடி பரவசப்படுத்தினார்.

மொத்தத்தில் ஆயிரம் நிலவே வா பாடலை தந்த பாலாவின் பாடல்களால் பல இதயங்கள் இனிமை கண்டன என கூறினார்.

இந்த நிகழ்வில் பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.குறிப்பாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் புகைப்பட கலைஞரும் கவிஞரும் நடிகருமான மொகமட் நாசார் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது..

படங்கள். எம்.நசார் (M.nazar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *