பிரான்ஸின் Annecy நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
8 சிறுவர்கள் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சிரியாவிலிருந்து தப்பிச் சென்றவர் எனத் தெரியவந்துள்ளது.