புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் மேதினக்கூட்டமும், ஊர்வலமும் நுவரெலியா – இராகலையில் நேற்று (01)இடம்பெற்றது.
இராகலை நடுக்கணக்கு சந்தியில் இருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் நகரம் வழியாக இராகலை ஜெமினி மண்டபத்தை அடைந்தது.
அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது.
ஊர்வலத்தின் போது அரசாங்க செயற்பாட்டை கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டதுடன், பதாதைகளையும் காட்சிப்படுத்திருந்தனர்.
குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலைமை உரையை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதி சிவ ராஜேந்திரன் நிகழ்த்தினார்.