சிரேஷ்ட ஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன்

பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தையும் மொழிக்கொள்கையை புறக்கணித்து கொண்டுவரப்படும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்று
தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் சண். பிரபாகரன் தெரிவித்தார்

கொழும்பு விஹாரமாதேவி உள்ளக அரங்கில் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையினை பிரநிதித்துவ படுத்துகின்ற மற்றும் முன்னர் பிரநிதித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களின் கூட்டிணைவு
மாநாட்டில் பங்கு பற்றி பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உத்தேச தொழிற் சட்டத்தை எதிர்த்தும் தேசிய கடன் மறுசீரமைப்பு எனும் பேரில் நடக்கும் EPF மற்றும் ETF கொள்ளையினை நிறுத்துமாறும் கோரி தொழிற்சாங்கங்களின் பிரநிதிகள் மாநாட்டினை நாடாத்தியிருந்தனர். நாட்டின் தொழிலாளர் தேசிய சபையினை பிரதிநிதித்துவ படுத்தும் முன்னர் பிரநிதித்துவப்படுத்திய பதினான்கு தொழிற்சங்கங்களின் பிரநிதிகள் இதில் கலந்துக்கொண்டிருந்தனர் , இம்மாநாட்டில் தேசிய தொழிற்சங்க ஆலோசனை சபையின் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச் செயலாளருமான சண் பிரபாகரன் மேலும் பேசுகையில் கூறியதாவது:

உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டமானது ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில் 13 தொழில் சட்டங்களை இல்லாதொழித்து தனிச் சட்டமாக உருவாக்க பட்டுள்ளது. பல்வேறு பாரதூரமான சரத்துக்களை கொண்டிருக்கின்றன. இந்த உத்தேச சட்ட திருத்தினை இன்று ஒட்டு மொத்த தொழிற்சமூகமும் எதிர்த்துவருகின்றது. முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் இந்த சட்டத்தை நிறுத்துவதாக தொழில் அமைச்சர் கூறினாலும் இசசட்டமானது தொழில்தருநரை மேலும் பலப்படுத்துவதாகவும் தொழிலாளர்களை மேலும் அடிமைகளாக மாற்றுகின்ற முயற்சியே இதுவாகும் .

மேலும் இதுவே நாட்டின் ஒரே தொழில் சட்டமாக இருக்கும் என்கிறபோது பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள எட்டு சட்டங்களுக்கு என்ன நடந்தது என இங்கே கேட்க விரும்புகின்றேன். அமைச்சர் 21 சட்டங்கள் என்பதினை திருத்திக்கொள்ள வேண்டும். புதிய உத்தேச தொழில் சட்டத்தில் இந்த 8 சட்டங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் அமைச்சர் தேசிய உத்தேச சட்ட சமர்ப்பின்போது தமிழ் மொழிபெயர்ப்பினை வழங்கவில்லை இது தேசிய மொழிக்கொள்கைக்கு விரோதமான செயற்பாடாகும்

ஆகவே இரண்டு லட்சம் தொழிலாளர் படையை புறந்தள்ளி தேசிய மொழிக்கொள்கையையும் புறக்கணித்து எம்மக்களை அடிமைத்தொழிலாளிகளாக மற்றும் இந்த உத்தேச சட்ட மூலத்தை சட்டமாக்க தொழிலாளர் தேசிய சங்கம் துணைப்போகாது என்று சண் பிரபாகரன் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *