இந்த வருடாந்த இடம்மாற்றங்கள் பெரும்பாலும் ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவை தொடர்ந்து இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய மன்னார் மறைமாவட்த்தின் பாதுகாவலியும் உலகப் பகழ்பெற்ற புனித ஸ்தலமான மருதமடு அன்னையின் ஆலயப் பரிபாலகராக கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை இவ் ஆலய பரிபாலகராக கடமையாற்றி வந்த அருட்பணி பெப்பி சோசை இடமாற்றம் பெற்றதைத் தொடர்ந்து மன்னார் முன்னாள் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் புதிய மடு ஆலய பரிபாலகராக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய பணிப்பொறுப்பானது ஞாயிறிறுக் கிழமை (27) காலை மடு ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலி வேளையில் மன்னார் ஆயர் திருச்சபையின் மரபுபடி திவ்விய நற்கருணை பேழை திறவுகோலை புதிய பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரிடம் ஒப்படைத்து மடு பரிபாலகர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
(வாஸ் கூஞ்ஞ)