( நூரளை பி. எஸ். மணியம்)
பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உணவு பாதுகாப்பு விஷேட வேலைத்திட்டத் தின் கீழ் மாண்புமிகு அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் எண்ணக்கருவின் அடிப்படையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாம் உணவு பாதுகாப்பு மற்றும் போஷனை மட்டத்தை அதிகரித்தல் வேலைத் திட்டம் , ஐக்கிய நாடுகளின் உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கான உணவை வழங்கு வதற்கான விசேட வேலைத்திட்ட மொன்றை ஆரம்பிக்க உள்ளோம். இந்த வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கொழுபிலுள்ள சினமன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே இது குறித்து ஆராய்யப்பட்டதாக மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.அவர் இவ்விடயம் தொடர்பாக மேலும். தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட பகுதியிலுள்ள பாடசாலை உணவுத் திட்டத்திற்காக பல பங்குதாரர்களுடனான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே கொள்கையுடன் மேம்படுத்துவதற்கும் உதவும் என்று கலந்துரையாடலின் போது வலியுறுத்தினேன்.
இவ் அணுகுமுறை பெருந்தோட்டங் களில் உள்ள பாடசாலை மாணவர் களுக்கு பாதுகாப்பான பன்முகத் தன்மை வாய்ந்த ஊட்டமளிக்கும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளூர் உணவை வழங்குவதற்காக உள்ளூர் சிறு விவசாயிகளை உருவாக்கல் மற்றும் இளம் விவசாயிகளும் இப் பாடசாலை உணவுத் திட்டம் இணைக்கிறது.
எங்களது முயற்சியை அங்கீகரித்து தோட்டங்களில் இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்து வதற்கு ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டதற்காக இலங்கை தோட்டதுரைமார் சம்மேளனத்திற்கும் ( சிலோன் பிளான்டர்ஸ் அஸோஸியேஷன்) நான் எனது நன்றி தெரிவித்தேன்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் (SUN) சன் வர்த்தக வலையமைப்பின் ஊடாக 140 பெருந்தோட்டத் துறை பாடசாலைகளுக்கு சேவை வழங்க திட்டமிட்டுள்ளோம். முன்னோடித் திட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் இத்திட்டத்தை ஆரம்பிக்ககவும் அதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இந் நிகழ்வில் உலக உணவுத் திட்டத்தின் நாட்டுப் பணிப்பாளர் அப்துல் ரஹீம் சித்திகி , ஜனாதிபதி யின் மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, துஷான் ரத்வத்த,இலங்கை தோட்டத்துரைமார் சம்மேளனத்தின் ( சிலோன் பிளான்டர்ஸ் அஸோஸியேஷன்) பிரதித் தலைவர் லால் பெரேரா பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் கலனா பெரிஸ், WFP இன் ஊட்டச்சத்து மற்றும் பள்ளி சார்ந்த திட்டங்களின் தலைவரும் கல்வி அமைச்சின் செயலாளருமான திருமதி மாலகா PHDT சுகாதார பணிப்பாளர் டாக்டர் சரத் அமுனுகம மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்கள், பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் , JEDB, NIPM, தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம், CTTA ஆகியவற்றின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.