இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மலையகத்தின் அட்டன் நகரத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது.
இந்த அன்னதான நிகழ்லில் இன மத பேதமின்றி, நகர மற்றும் கிராம மக்கள் தோட்டபுர மக்கள்¸ அட்டன் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள்¸ உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
(க.கிஷாந்தன்)