இந்தியர்கள் அமெரிக்கா வந்து பணிபுரிந்து குடியேறுவதை எளிதாக்க பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயம் தொடர்பாக, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சில இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடியும்.
அது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (22) வெளியிடவுள்ளது.
அதன்படி, எச்-1பி விசாவில் நாட்டிற்குள் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற நாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குச் செல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் போதே தங்கள் விசாக்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
இது தொடர்பான முன்னோடித் திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.