இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருளாதார முகாமைத்துவக் கொள்கை அடுத்த மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சிறந்த வர்த்தகர்கள் 40 பேரை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற “பிசினஸ் டுடே” விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.