உக்ரைன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகப் போரைத் தொடங்கினால், இரண்டாம் உலகப் போரின் போது தோற்கடித்தது போல் அவர்களைத் தோற்கடிப்போம் என்கிறார் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ட்ஜகார்யன்.
இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த ரஷ்ய போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் உள்ள போர் நினைவுத்தூபியில் நேற்று இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்து கொண்ட போதே தூதுவர் (Levan Dzhagaryan) மேற்கண்டவாறு தெரிவித்தார்.