போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக ஜெலன்ஸ்கியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற G-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
அப்போது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் மோடி – ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ”ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் ஒரு அமைதி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியாவும் உதவி செய்ய வேண்டும்” என்று பிரதமர் மோடியிடம் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறேன் என்று ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.