“மேற்குலக நாடுகளால் நமக்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நேற்று மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் ஆண்டுதோறும் வெற்றி அணி வகுப்பு நடைபெறும்.
நிகழ்வில் ரஷ்ய ஜனாதிபதி பேசும்போது, “எங்கள் தாய்நாட்டிற்கு எதிராக போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
தற்போது நடக்கும் போர் திணிக்கப்பட்டது. உக்ரைனில் சண்டையிடும் ராணுவ வீரர்கள் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலம் உள்ளது.
ராணுவ வீரர்களே ஒட்டுமொத்த நாடும் உங்கள் பக்கம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு உங்களை நம்பித்தான் உள்ளது என தெரிவித்துள்ளார்.