( வாஸ் கூஞ்ஞ)
மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளாக ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும் தலா 45000 ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் மெசிடோ நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் தமது வாழ்வாதார தொழிலாக சலவை மற்றும் சலவைத் தூள் சவர்க்காரம் மற்றும் தொற்றுநீக்கி போன்ற 06 உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சினை சிறப்பாக பெற்ற பயிற்சியாளர்களுக்கு மெசிடோ நிறுவனத்தின் தலைமையில் இலங்கை கைத்தொழில் அதிகார சபையின் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதன் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலக ஜெயிக்கா மண்டபத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் , சிறப்பு விருந்தினர்களாக இலங்கை கைத்தொழில் அதிகார சபை உதவி முகாமையாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் , அனர்த்த முகாமைத்துவ அதிகார சபை உதவிப் பணிப்பாளர் க.திலீபன் . மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப் பணிப்பாளர் வீ.கலீஸ்ரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மன்னார் மெசிடோ பணிப்பாளர் ஜே.யாட்சன் பிகிராடோ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் நிவாரணப் பணியின் ஒரு பகுதியாக மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக 40 குடும்பங்களுக்கும்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சார்ந்த தலா 40 குடும்பங்களுக்கும் யாழ் மாவட்டத்தைச் சார்ந்த 52 குடும்பங்களுக்கும் மொத்தமாக 172 மீனவ குடும்பங்களுக்கு தலா 45000 ரூபா பெறுமதியான வலைகள் உள்ளடங்களாக மீன்பிடி உற்பத்தி பொருட்கள் இவ்வைபவத்தில் வழங்கப்பட்டன.
(வாஸ் கூஞ்ஞ)